சென்னை: பூங்கா நகர் பல்லவன் சாலையை சேர்ந்த கூலித் தொழிலாளியான ராஜா அவரது மனைவி சுதாவை, சகோதரி ஆனந்தியுடன் சேர்ந்து வரதட்சணைக் கேட்டு கொடுமைப்படுத்தி வந்தார். இதனிடையே அடிக்கடி குடிபோதையில் தாக்கியதால் மனமுடைந்த சுதா, 2016ஆம் ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீசார் நடத்திய விசாரணையில், ராஜா அவரது சகோதரி ஆனந்தி இருவரும் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியில் வந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 1) நீதிபதி டி.ஹெச்.முகமது பரூக் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ராஜாவுக்கு 10 அண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும், ஆனந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: மனைவியுடன் சேர்ந்த நண்பர்.. திருமணத்தை மீறிய உறவில் இருந்த காதலி தற்கொலை!