ETV Bharat / city

சென்னை விசாரணை கைதி மரணம்- மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு! - குடும்பத்தினர் குற்றச்சாட்டு

சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி மரணம் தொடர்பாக காவலர்களிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தினார். இதனிடையே மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாக குடும்பத்தினர் குற்றச்சாட்டியுள்ளனர்.

சென்னை விசாரணை கைதி மரணம்- மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

author img

By

Published : Apr 21, 2022, 11:41 AM IST

சென்னை:சென்னை தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதையடுத்து, எழும்பூர் பெருநகர குற்றவியல் 2-வது நீதிமன்ற மாஜிஸ்திரேட் யஸ்வந்த் ராவ், தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் மற்றும் அயனாவரம் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

விக்னேஷிடம் விசாரணை நடத்திய காவல் உதவி ஆய்வாளர், தலைமைக்காவலர், காவலர் ஆகியோரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்த விக்னேஷ் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு மாஜிஸ்திரேட் ஆய்வு செய்தார்.

பிரேத பரிசோதனை கண்காணிப்பு: விக்னேஷின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் பிறகு விக்னேஷின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. அது வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து விக்னேஷ் உடல் அவரது சகோதரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் விக்னேஷ் உடலை அடக்கம் செய்ய காவல்துறையினரே கொண்டு செல்வதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பாக விக்னேஷின் உறவினர்கள் கூறுகையில், "விக்னேஷிற்கு பெற்றோர் இல்லாததால் காவல்துறையினர் மற்ற உறவினர்களை பார்க்கவிடாமல் தடுப்பதாகவும், இறப்பிற்கான முழுமையான காரணத்தை கூறாமல் மறைப்பதாகவும்" குற்றம்சாட்டினர்.

சென்னை விசாரணை கைதி மரணம்- மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!

விக்னேஷின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை கைது செய்த போது போலீசை கத்தியை காட்டி மிரட்டியதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. பொதுவாக இது போல் நடைபெறும் போது போலீசார் செல்போனில் வீடியோ பதிவு செய்வது வழக்கம். அதைப்போல இந்த சம்பவத்தில் நடந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதேபோல் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்துள்ள நிலையில், இதுவரை சம்பந்தப்பட்ட காவலர்கள் யார் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:காவல் நிலையத்தில் விசாரணை கைதி சந்தேக மரணம்: சென்னை காவல்துறை விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.