சென்னை: சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி கடந்த 2017ஆம் ஆண்டு தன்னுடன் பயின்ற மாணவர் கிங்சோ தேப்ஷர்மா, சுபதீப் பானர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ ஆகியோரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் மனமுடைந்த மாணவி மூன்று முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து கடந்த 2021 ஜூன் மாதம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட மாணவர்கள் உட்பட 8 பேர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீசார் மேற்குவங்கத்திற்குச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கிங்சோ தேப்சர்மா என்பவரைக் கைது செய்தனர். மேலும் பட்டியலின பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததால் எஸ்.சி எஸ்டி வன்கொடுமை சட்டம் மற்றும் பாலிய பலாத்கார சட்டம் என மேலும் இரு பிரிவைச் சேர்த்தனர்.
டிஜிபி வெங்கடேசன் நியமனம்:கைது செய்யப்பட்ட தேப்சர்மா முன் ஜாமீன் பெற்றதால் சம்மன் கொடுத்து விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவியிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் வெளிமாநிலங்களில் இருப்பதால் சென்னை காவல்துறைக்கு விசாரணை நடத்தச் சவாலாக இருப்பதால், இதனைக் கருத்தில் கொண்டு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக சிபிசிஐடி டி.எஸ்.பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் முதற்கட்ட விசாரணையை டி.எஸ்.பி வெங்கடேசன் துவக்கி உள்ளார்.
இதையும் படிங்க:சென்னை ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: பேராசிரியர்களுக்கு நிபந்தனை முன்ஜாமீன்