ETV Bharat / city

களங்கம் கற்பிப்போர் மீது கடும் நடவடிக்கை - நீதிபதி எச்சரிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: நீதிமன்றங்கள் மீது களங்கம் கற்பிக்கும் வகையிலான செய்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

highcourt
highcourt
author img

By

Published : Oct 5, 2020, 7:52 PM IST

முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன், 1995ஆம் ஆண்டு குரோம்பேட்டையில் உள்ள குரோம் லெதர் ஃபேக்டரி என்ற நிறுவனத்தை வாங்கியது தொடர்பாக, குவிட்டன்தாசன் என்பவரின் புகார் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரியும் ஜெகத்ரட்சகன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், “முந்தைய அழைப்பாணைகளுக்கு மனுதாரர் தரப்பில் ஆஜராகாமலும், ஒத்துழைப்பு வழங்காத சூழலும் இருந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் மற்றும் ஸ்ரீநிஷா ஆகியோர் கடந்த மாதம் 30ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகினர். அப்போது காவல்துறையின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும், ஆவணங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கவும் 2 வாரம் அவகாசம் கோரினர்.

இந்த வழக்கிற்காக 9,000-க்கும் மேற்பட்ட ஆவணங்களை சரிபார்க்க வேண்டியுள்ளதால், இதுவரை 60% விசாரணை மட்டுமே முடிவுற்றுள்ளது. வழக்கின் நிலை குறித்து பதில் மனு விரைவில் தாக்கல் செய்யப்படும்“ எனத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் நவம்பர் மாதம் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதற்குள் சிபிசிஐடி தரப்பு பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டதோடு, அதுவரை ஜெகத்ரட்சகனை தொந்தரவு செய்யக்கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, ஜெகத்ரட்சகன் மீதான மோசடி புகாரை விசாரித்து வரும் நீதிமன்றம் மீது களங்கம் கற்பிக்கும் வகையில் செய்திகள் பரப்பப்படுவது வருத்தம் அளிப்பதாகவும், அண்மை காலங்களில் யார் வேண்டுமானாலும் யாரை பற்றியும் அவதூறை பரப்பி விடலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது கவலை கொள்ள செய்வதாகவும் நீதிபதி வருத்தம் தெரிவித்தார். அவ்வாறு அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: திரைப்படம் தயாரிக்க போவதாக கூறி மோசடி: தயாரிப்பாளரை கைது செய்த போலீஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.