ETV Bharat / city

ஊழல் சமுதாயத்தை கரையான்போல் செல்லரித்துவிட்டது - சென்னை உயர் நீதிமன்றம் - chennai district news

ஊழல் தனது வேர்களைப் பரப்பி சமுதாயத்தை கரையான்போல் செல்லரிக்கச் செய்துவிட்டதாகச் சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
author img

By

Published : Oct 2, 2021, 4:40 PM IST

சென்னை: காவல் துறை அலுவலர் பாஸ்கரன் என்பவர் 1,500 ரூபாய் கையூட்டு பெற்றதற்காக, இடைநீக்கம் செய்து காவல் துறை கூடுதல் டிஜிபி உத்தரவு பிறப்பித்தார். அதேசமயம் தனக்கு எதிராக எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறி, இடைநீக்கத்தை எதிர்த்து பாஸ்கரன் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, இடைநீக்க உத்தரவை ரத்துசெய்து பாஸ்கரனை சாதாரண பதவியில் மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூடுதல் டிஜிபி சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன், நக்கீரன் அடங்கிய அமர்வு, இடைநீக்கம் செய்த பிறகு எந்த ஒழுங்கு நடவடிக்கையும் மேற்கொள்ளாததால் பாஸ்கரனை மீண்டும் பணியில் சேர்க்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை முடித்துவைத்தது.

அதேசமயம் பாஸ்கரனுக்கு எதிராகக் குற்ற வழக்கு நிலுவையில் இருந்தாலும், ஒழுங்கு நடவடிக்கைத் தொடரலாம் என அனுமதி அளித்த நீதிபதிகள், ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை நாள்தோறும் என்ற அடிப்படையில் நடத்தி விரைவில் முடிவெடுக்க வேண்டும். ஊழல் வழக்குகளில் சிக்குவோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய அலுவலர், அதைச் செய்யத் தவறும்பட்சத்தில் அவருக்கு எந்தப் பதவி உயர்வும் வழங்கக் கூடாது என உத்தரவிட்டனர்.

மேலும் கையூட்டுப் பெறுவது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டதாகக் கூறிய நீதிபதிகள், ஊழல் தனது வேர்களைப் பரப்பி சமுதாயத்தை கரையான்போல் செல்லரிக்கச் செய்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'நவம்பர் 1ஆம் தேதி பள்ளிகள் திறப்பு உறுதி'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.