ETV Bharat / city

தமிழ்நாட்டில் கரோனா இல்லை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்! - கொரோனா

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இதுவரை யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை எனவும், சீனாவில் இருந்து வருகை தந்த பெண்ணொருவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கண்காணிப்பில் உள்ளார் என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி தெரிவித்துள்ளார்.

precaution
precaution
author img

By

Published : Jan 31, 2020, 8:25 PM IST

Updated : Mar 17, 2020, 5:26 PM IST

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவக் கல்லூரியின் முதல்வரான ஜெயந்தி செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது அவர், ” பொது மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் நோய் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். நோய் பாதிப்புடன் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்க முதல்கட்டமாக 6 படுக்கை வசதிகள் கொண்ட வார்டு தயார் நிலையில் உள்ளது.

26,500 மூன்றடுக்கு முகக் கவசங்கள் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் அணிவதற்கான முழு உடல் கவசங்களும் தயார் நிலையில் உள்ளன. இந்த வைரஸ் நோய் குழந்தைகள் மற்றும் வயதானவர்களை விரைவில் தாக்கும். சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஆகியவை இதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள். ரத்த பரிசோதனை, சளி பரிசோதனை செய்வதன் மூலம் எந்த வகையான வைரஸ் தாக்கியுள்ளது என்பதை கண்டறிய முடியும். கரோனா வைரஸ் பாதிப்பு குறித்து கண்டறிய சென்னை ’கிங்’ நோய் தடுப்பு ஆராய்ச்சி நிலையத்தின் மூலம், பூனேவில் உள்ள பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பி, அங்கு பரிசோதனை செய்த பின்னர்தான் நோய் தொற்று குறித்து உறுதி செய்ய முடியும்.

ரத்தம், சளி பரிசோதனையில் எந்த வகை வைரஸ் தாக்கியுள்ளது என்பது தெரியும்

சீனாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வருபவர்களுக்கு விமான நிலையங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கிருந்து செல்பவர்கள் வீடுகளில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். சீனாவிலிருந்து சென்னை வந்த பெண்ணுக்கு காய்ச்சல் காரணமாக நேற்று இரவு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். பரிசோதனை செய்ததில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனாலும் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

பொது மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பொதுமக்கள் கை கழுவும் பழக்கத்தை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டைப் பொருத்தவரை கரோனா நோய் பாதிப்பு ஒருவருக்கும் இல்லை. இருந்தாலும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது ” எனத் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா இல்லை

இதையும் படிங்க: கரோனா வைரஸ்: உலக சுகாதார அவசரநிலை அறிவிப்பு

Last Updated : Mar 17, 2020, 5:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.