ETV Bharat / city

சென்னையில் கொட்டித் தீர்த்த மழை : ஒரு மணி நேரத்தில் 6.5 செ.மீ பதிவு!

author img

By

Published : Oct 22, 2020, 7:16 PM IST

சென்னை : மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

rain
rain

மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், அதனோடு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஆகியவை நிலவி வருவதால், தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று (அக்.22) காலை வெயில் அடித்த நிலையில், மாலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டன. அதைத்தொடர்ந்து பல்வேறு பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. மாநகரின் மத்தியப் பகுதியான அண்ணா சாலை, எழும்பூர் போன்ற இடங்கள் தண்ணீரில் தத்தளித்தன. நுங்கம்பாக்கத்தில் ஒரு மணி நேரத்தில் 6.5 செ.மீ மழை பதிவானது. இது இயல்பை விட அதிகமாகும்.

ஒரு மணி நேரத்தில் 6.5 செ.மீ பதிவு!

அதேபோல், பெரம்பூர், கொளத்தூர், திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், துறைமுகம், பாரிமுனை, மெரினா, ராயப்பேட்டை, மயிலாப்பூர், கோடம்பாக்கம், அயனாவரம், புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், ஆங்காங்கு வாகனங்கள் பள்ளங்களில் சிக்கியதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: மேம்பால தடுப்புச் சுவரின் மீது இருசக்கர வாகனம் மோதி பெண் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.