கத்தார் நாட்டின் தோகா நகரிலிருந்து சிறப்பு மீட்பு விமானம், 202 இந்தியர்களுடன் ஜூலை 18ஆம் தேதி சென்னை வந்தது. அதில் ஆண்கள் 170, பெண்கள் 22, சிறுவர்கள் 8, குழந்தைகள் 2 எனும் எண்ணிக்கையில் இருந்தனர்.
இவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் 126 பேர் அரசின் இலவச தங்குமிடமான விஐடி கல்லூரிக்கும், 76 போ் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான தனியார் விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு
ஓமன் நாட்டின் மஸ்கட் நகரிலிருந்து 182 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 140, பெண்கள் 34, சிறுவர்கள் 6, குழந்தைகள் 2 எனும் எண்ணிக்கையில் இருந்தனர். இவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 130 பேர் அரசின் இலவச தங்குமிடமான விஐடி கல்லூரிக்கும், 52 பேர் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான தனியார் விடுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர்.
ரஷ்யாவின் மாஸ்கோவிலிருந்து 468 இந்தியா்களுடன் சிறப்பு தனி விமானம் சென்னை வந்தது. இவர்கள் அனைவருமே ரஷ்யாவில் சிக்கித்தவித்த மருத்துவ கல்வி பயிலும் மாணவ மாணவிகள் ஆவர். அவர்களில் மாணவர்கள் 270, மாணவிகள் 198 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் கட்டணம் செலுத்தி தங்குமிடங்களான சென்னை நகர தங்கும் விடுதிகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இங்கிலாந்து நாட்டின் லண்டனிலிருந்து 176 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு தனி விமானம் சென்னை வந்தது. அதில் ஆண்கள் 94, பெண்கள் 76, சிறுவர்கள் 6 பேர் இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு சென்னை நகர தங்கும் விடுதிகளில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.