ETV Bharat / city

டெங்கு தடுப்பு: மாநகராட்சிக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

வாகனத்தில் எடுத்துச் செல்லும் 69 புகை பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லும் 267 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 12 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களை கொண்டு முதிர் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

author img

By

Published : Jul 4, 2021, 1:29 AM IST

Updated : Jul 4, 2021, 9:07 AM IST

CGC ASK People - DENGUE APPEAL
CGC ASK People - DENGUE APPEAL

சென்னை: டெங்குவை தடுக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், ”டெங்குவை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது கொசு ஒழிப்பு பணிக்கென 1,262 நிரந்தரப் பணியாளர்களும், 2,359 ஒப்பந்தப் பணியாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.

கொசு புழுக்களை அழிக்க நடவடிக்கை

சென்னை மாநகரில் உள்ள பகுதிகள் 500 வீடுகள் கொண்ட சிறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வட்டத்திற்கும் உள்பட்ட தெருக்களில் வாரந்தோறும் கொசு புழு வளரிடங்களான மேல்நிலை, கீழ்நிலை தொட்டி, கிணறு, டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவற்றில் கொசு புழுக்கள் இருப்பின் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

256 கைத்தெளிப்பான்கள், 167 அதிவேக திறன் கொண்ட கைத்தெளிப்பான்களைக் கொண்டு குடிசைப் பகுதிகள், பள்ளிகள், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்கள், மழைநீர் வடிகால்கள் மற்றும் திறந்தவெளி கால்வாய்களிலும் கொசுப்புழு அழிக்கும் மருந்துகள் தெளிக்கப்பட்டு கொசுக்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன.

நீர்நிலைகளில் கொசுப்புழுக்களை உண்ணும் கம்பூஃசியா என்னும் மீன்கள் விடப்பட்டு கொசுப்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிப்பு

வாகனத்தில் எடுத்துச் செல்லும் 69 புகை பரப்பும் இயந்திரங்கள், கையினால் எடுத்துச் செல்லும் 267 புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 12 சிறிய வகை புகை பரப்பும் இயந்திரங்களை கொண்டு முதிர் கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேரத்தை மிச்சப்படுத்த சென்னை மாநகராட்சியின் சார்பில் ட்ரோன் மூலம் சோதனை முறையில் கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. எனவே பொதுமக்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரித்து மாநகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'எதிர்காலம் குறித்த கவலை எனக்கில்லை' - கட்சித் தாவியவுடன் காலரை தூக்கி விட்ட பழனியப்பன்

Last Updated : Jul 4, 2021, 9:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.