சென்னை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை வைத்துள்ள தனியார் கட்டடங்கள், பெரு நிறுவனங்களிடம் இருந்து சொத்து வரியை வசூலிக்கும் நடவடிக்கைகளை மாநகராட்சி அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், நுங்கம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் லயோலா கல்லூரி நிர்வாகம், சென்னை மாநகராட்சிக்கு 96 லட்சத்து 46 ஆயிரத்து 688 ரூபாய் சொத்து வரி காட்டாமல் நிலுவை வைத்துள்ளதாக கூறி கல்லூரி வளாகத்தில் மாநகராட்சி அலுவலர்கள் நோட்டிஸ் ஒட்டியுள்ளனர். இதே போன்று 75 லட்சம் ரூபாய் நிலுவை வைத்துள்ள தி.நகர் ஓட்டல் ரெசிடெண்சிக்கும் அறிவிப்பாணை ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், பல இடங்களில் மாநகராட்சி அலுவலர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் பின்பும் வரி செலுத்த தவறும் நிறுவனங்கள் சீல் வைக்கப்படும் என அலுவலர்கள் எச்சரித்தனர்.
இதையும் படியுங்க: அரசு கலைக் கல்லூரி மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை