ETV Bharat / city

மாநகராட்சி பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் - ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை: மாநகராட்சியில் பணியாற்றும் பல்வேறு வகை பணியாளர்களுக்கும் நோய் தொற்றாமல் இருக்க சிறப்பு மருத்துவ சிகிச்சை முகாம்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

camp
camp
author img

By

Published : Feb 3, 2020, 7:06 PM IST

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 200 வார்டுகளில், நிரந்தர மற்றும் தற்காலிகமாக பணிபுரியும் கொசுத் தடுப்புப் பணியாளர்கள், துப்புரவுப் பணியாளர்கள், அம்மா உணவகப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், மின்துறைப் பணியாளர்கள் மற்றும் பூங்காப் பணியாளர்கள் என மொத்தம் 28,932 பணியாளர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு தொற்று நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள், அந்தந்த வார்டுகளில் இன்று முதல் பிப்ரவரி 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அந்த வகையில், மாநகராட்சி பணியாளர்களுக்கான மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், எழும்பூர் கண் மருத்துவமனை அருகே இன்று தொடங்கி வைத்தார்.

இந்த முகாம்களில், மாநகர நல அலுவலர், பெருநகர மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணியாளர்களுக்கும், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.

காசநோய், ரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இசிஜி, குடற்புழு நீக்கம், மன பரிசோதனை, தொழுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, போதை பழக்கத்திலிருந்து மீள்வதற்கான ஆலோசனை போன்றவற்றை உள்ளடக்கிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருந்துகள் இலவசமாக வழங்கப்படவுள்ளன. மேலும், தொடர் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி, பணியாளர்கள் உயர் சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா நினைவு நாள் பொது விருந்து - முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்பு!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 03.02.20

பொது மக்களுக்கு நோய் தொற்றுகளை அகற்ற பணியாற்றும் ஊழியர்களுக்கு நோய் தொற்றாமல் இருக்க சிறப்பு சிகிச்சை மையங்கள் தொடக்கம்..

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 200 வார்டுகளில் நிரந்தரம் மற்றும் தற்காலிகமாக பணிபுரியும் கொசு தடுப்பு பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், அம்மா உணவகப் பணியாளர்கள், சாலைப் பணியாளர்கள், மின் துறை பணியாளர்கள் மற்றும் பூங்காக்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு என மொத்தம் 28,932 பணியாளர்களுக்கு தொற்று நோய் தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு முகாம்கள் அந்தந்த வார்டுகளில் 03.02.20 முதல் 28.02.20 ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த முகாம்களை மாநகர நல அலுவலர், பெருநகர மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பணியாளர்களுக்கும் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளது. இந்த சிறப்பு முகாம்களில் காசநோய், ரத்தப்பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இசிஜி, குடற்புழு நீக்கம், தொண்டை மன பரிசோதனை, சிபி இ, தொழுநோய் பரிசோதனை, கண் பரிசோதனை, போதை பழக்கத்திற்கான ஆலோசனை போன்றவற்றை உள்ளடக்கிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. மேலும், தொடர் சிகிச்சை தேவைப்பட்டால் மருத்துவர்கள் ஆலோசனைப்படி உயர் சிகிச்சைக்காக அனுப்பப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது..

tn_che_03_special_medical_camps_for_corporation_employees_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.