சென்னை: சென்னை மாநகராட்சியில் மண்டலம் 1 முதல் 15 வரை நாள்தோறும் சராசரியாக சுமார் 5,100 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரமாகின்றன.
நாள்தோறும் சேரும் குப்பையை அகற்றுவதற்காக 358 கனரக மற்றும் இலகுரக காம்பாக்டர் மற்றும் டிப்பர் வாகனங்கள் மற்றும் 3,725 பேட்டரி மூலம் இயங்கக்கூடிய மூன்று சக்கர வாகனங்கள் அன்றாடம் தூய்மைப் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
நவம்பர் 3ஆம் தேதி கிடைத்த குப்பை
நேற்று முன் தினம் 5076,53 மெட்ரிக் டன் குப்பை, 559.32 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்டது. இதில் சுமார் 416 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 145 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பப்பட்டுள்ளன.
நவம்பர் 4ஆம் தேதி கிடைத்த குப்பை
மேலும் நேற்று (நவ.04) 4,312.40 மெட்ரிக் டன் குப்பை, 499.70 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாகச் சேகரிக்கப்பட்டுள்ளது.
இதில் சுமார் 454.64 மெட்ரிக் டன் குப்பை மறுசுழற்சி மையங்களுக்கும், 45.06 மெட்ரிக் டன் கட்டடக் கழிவுகள் நிலங்களில் நிரப்புவதற்கும் அனுப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் கொடுங்கையூர், பெருங்குடிக் குப்பை கொட்டும் வளாகங்களுக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் உள்ள சாலைகளில் கூடுதலாகச் சேகரமாகும் பட்டாசுக் குப்பைகள் தூய்மைப் பணியாளர்கள் மூலமாக அந்தந்த மண்டலங்களில் தனியாகச் சேகரிக்கப்பட்டு வருகிறது.
நவம்பர் 5ஆம் தேதி நிலவரம்
இன்று (நவ.05) நண்பகல் 12 மணி வரை 138.21 மெட்ரிக் டன் பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:சிசிடிவி பதிவு: நொடிப்பொழுதில் வெடித்துச் சிதறிய வாகனம் - தந்தை, மகன் உயிரிழப்பு!