ETV Bharat / city

தொற்றுநோய் பரவாமல் இருக்க சிறப்பு மருத்துவ முகாம்கள்...

author img

By

Published : Nov 10, 2021, 10:11 AM IST

மழைக்காலங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 200 வார்டுகள் மற்றும் நிவாரண முகாம்களில், தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சி சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்துள்ளது.

தொற்றுநோய்கள் பரவாமல் இருக்க சிறப்பு முகாம்கள்

சென்னை: கடந்த 2 நாட்கள் பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில், வசித்து வந்த சுமார் 1,343 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மாநகராட்சியின் 58 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாள்தோறும் மூன்று வேளை உணவு, குடிநீர் போன்ற தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மழைக்காலங்களில் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்கவும், முகாம்களில் மாநகராட்சி மருத்துவர்களால் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு தேவையான மருந்துகளும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று(நவ.08) மட்டும் நிவாரண முகாம்களில் 47 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 1,673 நபர்கள் பயனடைந்துள்ளனர். மேலும், 200 வார்டுகளில் 205 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, சுமார் 8,500 பேர் பயனடைந்துள்ளனர். இதில் 673 நபர்களுக்குத தோல் சம்பந்தமான சிகிச்சைகளும், 295 நபர்களுக்குக் காய்ச்சலுக்காகச் சிகிச்சைகளும் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் தேங்கும் இடங்களில் டெங்குகாய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில் கொசு ஒழிப்பு பணிகள்
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பணிகளில் 1,260 கொசு ஒழிப்பு நிரந்தர பணியாளர்கள், 2,359 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 3,619 பணியாளர்கள் மூலம் 256 மருந்து தெளிப்பான்கள், 167 பவர் ஸ்ப்ரேயர்கள், பேட்டரி மூலம் இயங்கும்.

மேலும், 479 ஸ்ப்ரேயர்கள், 287 கையினால் இயங்கும் புகை பரப்பும் இயந்திரங்கள், 12 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் மற்றும் 68 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகை பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசு ஒழிப்பு பணிகளில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது.

இதையும் படிங்க:விழுப்புரம் அருகே உடைந்த தடுப்பணை - அமைச்சர் பொன்முடி ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.