ETV Bharat / city

கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சி தயாராக உள்ளது - ககன் தீப்சிங் பேடி

வரும் 10, 11 ஆகிய தேதிகளில் பெய்யவுள்ள கனமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

ஆணையர் ககன் தீப்சிங் பேடி
ஆணையர் ககன் தீப்சிங் பேடி
author img

By

Published : Nov 9, 2021, 9:59 AM IST

சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைவெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் குறித்து மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “சென்னையில் நேற்று கனமழை பெய்ததில் 50-60 விழுக்காடு மழை நீர் நேற்றே (நவ.07) வடிந்து விட்டது.

317 பகுதிகளில் நேற்று (நவ.07) நீர் தேங்கியிருந்த நிலையில் 140 இடங்களில் முழுமையாக தண்ணீர் அகற்றப்பட்டுவிட்டது. 177 இடங்களில் மட்டும் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது. கொரட்டூர், மாம்பலம் பகுதியில் நீரின் அளவு குறைந்துள்ளது.

கனமழையை எதிர்கொள்ள மாநகராட்சி தயார்

மேலும் பல இடங்களில் நீர் முழுமையாக அகற்றப்படும். அதேபோல் ஒரே நாளில் மாநகராட்சி மூலம் மொத்தம் 7 லட்சத்துக்கு 16 ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி சார்பில் 58 இடங்களில் தங்கும் இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி மாநகராட்சியின் 16 சுரங்கப்பாதையில் 2 தவிர மற்ற இடங்களில் நீர் அகற்றப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும். 10, 11 தேதிகளில் அதிக மழைப்பொழிவு இருக்கும் என்று கூறியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள மாநகராட்சி தயாராக உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை.

சுகாதரப் பணிகள் தீவிரம்

மாநகராட்சி சார்பில் மின் மோட்டர், ஜேசிபி வாங்க 4 கோடி ரூபாய் அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், 41 இடங்களில் படகுகள் தயார் நிலையில் உள்ளன என்றார். அதுமட்டுமின்றி 1913 எண்ணில் 30 நபர்கள் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் விதமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

எடப்பாடி பழனிசாமி என்னிடம் தொலைபேசியில் பேசினார். தி.நகர் பகுதியில் விரைவாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கூறியிருந்தார். மழை நேரத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் சென்னையில் 3ஆயிரத்து 400 நபர்கள் மலேரியா தடுப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். தற்போது கொசு மருந்து அடிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன மழையிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நாள்தோறும் முறையாக நடைபெற்று வருகிறது. சென்னையில் 50 விழுக்காட்டினர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. அவர்கள் செலுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஜி.என்.செட்டி சாலையில் தேங்கிய மழைநீர்; பொதுமக்கள் அவதி - களத்தில் ஈடிவி பாரத்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.