சென்னையில் அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையார் போன்ற மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. நோய் தொற்று அதிகரித்து வருவதால் மாநகராட்சி பரிசோதனைகளை அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 125 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி பரவலை குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்களும், மக்களுக்கு தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரையிலும் சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 29 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 641 பேர் முழு குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 11 ஆயிரத்து 193 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 3 ஆயிரத்து 195 பேர் இந்த தொற்றினால் உயிரிழந்தனர்.
மண்டல வாரியான உறுதிசெய்யப்பட்டவரின் பட்டியல்:
- கோடம்பாக்கம் - 18,637 பேர்
- அண்ணா நகர் - 18,541 பேர்
- ராயபுரம் - 15,743 பேர்
- தேனாம்பேட்டை - 15,816 பேர்
- தண்டையார்பேட்டை - 13,514 பேர்
- திரு.வி.க. நகர் - 12,710 பேர்
- அடையாறு - 12,976 பேர்
- வளசரவாக்கம் - 10,839 பேர்
- அம்பத்தூர் - 11,671 பேர்
- திருவொற்றியூர் - 5,109 பேர்
- மாதவரம் - 5,957 பேர்
- ஆலந்தூர் - 6,667 பேர்
- சோழிங்கநல்லூர் - 4,709 பேர்
- பெருங்குடி - 5,806 பேர்
- மணலி - 2,598 பேர்