ETV Bharat / city

பாலியல் புகார்களுக்கு ரகசிய விசாரணை : காவல் ஆணையர் உறுதி

பாலியல் புகார் தெரிவிக்கும் மாணவிகளின் வீட்டிற்கே சென்று காவல்துறை ரகசிய விசாரணை மேற்கொள்ளும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

CHENNAI COMMISSIONER SHANKAR JIWAL
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : May 29, 2021, 11:00 PM IST

சென்னை: அமைந்தகரை புல்லா அவென்யூ அருகே நடைபெறக்கூடிய வாகன சோதனையை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் இன்று (மே 29) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்:

"மகரிஷி வித்யா மந்திர் பள்ளி பாலியல் விவகாரம் தொடர்பாக காவல்துறைக்கு இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. நாளை (மே 30) மொத்த மளிகை கடைகள் திறக்க இருப்பதால், போக்குவரத்து வாகனங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதனால், முக்கிய சாலைகளில் தடுப்புகள் அமைத்து இரண்டு வழிகளாகப் பிரித்து அதிமுக்கியதுவம் உள்ள வாகனங்கள், அடிப்படை அவசரத்திற்கான வாகனங்கள் ஆகியவை போக்குவரத்தில் சிக்காமல் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பு

நாளை சென்னை மாநகரில் 22 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். மளிகை கடைகள் நேரடியாக விற்பனையில் ஈடுபடாமல் டோர் டெலிவரி மூலமாக பொருட்களை கொண்டு செல்வதற்கும், டெலிவரி செய்யும் நபர்களுக்கு பாஸ் வழங்குவது குறித்தும் சென்னை மாநகராட்சிக்கு காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் நடைபெறும் பாலியல் தொந்தரவு குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தால் நேரடியாக பள்ளி மாணவிகள் இருக்கும் இடத்திற்கே சென்று ரகசிய விசாரணை நடத்தப்படும். அவர்கள் காவல் நிலையம் வரத் தேவையில்லை" என்றார்.

இதையும் படிங்க: பாலியல் புகார்: பயிற்சியாளர் நாகராஜன் போக்சோவில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.