ETV Bharat / city

கல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்!

சென்னை: கிராமத்தின் முறையை கல்லூரியில் கொண்டு வந்து மாணவிகள் பொங்கல் திருநாளை வெகு விமரிசையாகக் கொண்டாடினர்.

celebration
celebration
author img

By

Published : Jan 10, 2020, 8:27 PM IST

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் சாதி மத வேறுபாடுகளின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாள் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். உழவுக்கு உரித்தான சூரியனை வணங்குவது, பொங்கல் வைப்பது, பாரம்பரிய உடை அணிவது, கரும்பைக் கடிப்பது என பொங்கல் பண்டிகை நாட்கள் களைகட்டும்.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் கிராமங்களில் பொங்கல் வைப்பது போல, கல்லூரியிலும் அழகுற வடிவமைத்திருந்தனர். கல்லூரி வளாகத்தில் குடிசை அமைத்து, மாட்டு வண்டியில் பயணித்து, மாடுகளுக்கு பூஜை செய்தும், மண் பானையில் பொங்கல் வைத்தும், பாரம்பரிய இனிப்பு வகைகளை சமைத்து கல்லூரி மாணவிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.

அதே போல் கல்லூரி மாணவிகள், கிராமங்களில் அணியும் கண்டாங்கிச் சேலை அணிந்து நடனம் ஆடியும், உரி அடித்தும் மகிழந்தனர்.

மேலும் மன நலம் குன்றிய மாற்றுத்திறன் மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு போட்டிகள் நடத்தியும் பொங்கல் பண்டிகையை அவர்களுடன் இணைந்தும் கல்லூரி மாணவிகள் கொண்டாடினர்.

கல்லூரி மாணவிகளின் பொங்கல் கொண்டாட்டம்

இதையும் படிங்க: நெருங்கும் பொங்கல் பண்டிகை - ரூ.5 கோடி வரை விற்பனையான ஆடுகள்!

Intro:Body:பொங்கல் பண்டிகை - கிராமத்தின் பொங்கல் முறையை கல்லூரியில் கொண்டு வந்து விமரிசையாக கொண்டாடிய மாணவிகள்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பல்வேறு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் பொங்கல் பண்டிகையை விமர்சியாக கொண்டாடி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை மதம், சாதி வேறுபாடு இன்றி அனைவராலும் அனுசரிக்கப்படுவது வழக்கம். சூரியனை வழிபடுவது, பொங்கல் வைப்பது, பாரம்பரிய உடை அணிவது, உறவினர்களை சந்திப்பது என பொங்கல் பண்டிகை நாட்கள் கலைக்கட்டும்.

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள மகளிர் கல்லூரியில் கிராமங்களில் பொங்கல் கொண்டாடும் முறையை கல்லூரியில் வடிவமைத்து மகிழந்தனர். கல்லூரி வளாகத்தில் குடிசை அமைத்து, மாட்டு வண்டியில் பயணித்து, மாடுகளுக்கு பூஜை செய்தும், மண் பானையில் பொங்கல் வைத்தும், பாரம்பரிய இனிப்பு வகைகள் சமைத்து கல்லூரி மாணவிகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். அதே போல் கல்லூரி மாணவிகள் கிராமங்களில் அணியப்படும் கண்தங்கிச் சேலை போன்று அணிந்து நடனம் ஆடியும், உரி அடி போன்றவை விளையாடியும் மகிழந்தனர்.

மேலும் மன நிலம் குன்றிய மாணவர்களை கல்லூரிக்கு அழைத்து வந்து அவர்களுக்கு போட்டிகள் நடத்தியும் பொங்கல் பண்டிகை அவர்களுடன் இனைந்து கல்லூரி மாணவிகள் கொண்டாடினர்.

இது குறித்து கல்லூரி மாணவிகள் பேசுகையில், இந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கிராமத்தில் பொங்கல் பண்டிகை எவ்வாறு கொண்டாடுவார்களோ அதுபோல் இங்கு அமைத்து நன்பர்களுடன் கொண்டாடி வருகின்றோம். மேலும் இங்கு ராட்டினம், குடிசை, மாட்டு வண்டியில் பயணித்தது மகிழ்ச்சியாக உள்ளது என தெரிவித்தனர்.

கல்லூரி ஆசிரியர் மைதிலி பேசுகையில், கல்லூரி மாணவிகள் தற்போதுள்ளம் கிராமங்களுக்கு செல்வதற்கு வாய்ப்பு இருப்பது இல்லை. அதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராமத்தை கல்லூரியில் வடிவமைத்து பொங்கல் பண்டிகை கொண்டாடி வருகின்றோம் என தெரிவித்தார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.