ETV Bharat / city

தொழிலதிபர் கடத்தல் வழக்கு: காவல் உதவி ஆணையர் உள்பட மூவருக்கு பிடிவாரண்ட் - chennai businessman kidnapped case warrant issue

சென்னை தொழிலதிபர் கடத்தப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காவல் உதவி ஆணையர், ஆய்வாளர், உதவி ஆய்வாளருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

mhc
mhc
author img

By

Published : Mar 25, 2022, 12:22 PM IST

சென்னை அயப்பாக்கத்தை சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ் கடத்தப்பட்ட வழக்கில், திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன், அப்போது காவலர்களாக இருந்த கிரி, பாலா, சங்கர் மற்றும் அனைத்திந்திய இந்து மகா சபா கட்சித் தலைவர் ஸ்ரீகண்டன், அவரது மகன் தருண் கிருஷ்ணபிரசாத், சிவா ஆகியோர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இதனிடையே உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் மூவரும் தலைமறைவாகினர்.

இவர்களுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்க கோரி சிபிசிஐடி சார்பில், எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் புலன் விசாரணை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்க முடியாது என்று கூறி மனுவை நிராகரித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக சிபிசிஐடி தரப்பு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த மனு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, குற்ற விசாரணை முறைச்சட்டம் 73ஆவது பிரிவின் கீழ் புலன் விசாரணையில் உள்ள வழக்கிலும் பிடிவாரண்ட் பிறப்பிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் ஒரு வழக்கில் உறுதி செய்துள்ளது. எனவே கைது நடவடிக்கைகளிலிருந்து தப்பித்து, தலைமறைவாக உள்ள மூன்று காவல் அதிகாரிகளுக்கும் எதிராக எழும்பூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசு நிலத்தை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துக்கு வழங்க முடியாது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.