ETV Bharat / city

'45ஆவது சென்னை புத்தக காட்சி 800 அரங்குகளில் நடைபெறும்'

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் 800 அரங்குகள் அமைத்து புத்தக காட்சி நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

புத்தக கண்காட்சி நடைபெறும்
புத்தக கண்காட்சி நடைபெறும்
author img

By

Published : Dec 13, 2021, 9:21 PM IST

சென்னை: 45ஆவது சென்னை புத்தக காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் வரும் 2022 ஜனவரி மாதம் 6ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் அரங்கத்தில் இன்று(டிச.13) நடைபெற்றது.

அதில் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் வயிரவன் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள்,"ஜனவரி 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 45ஆவது சென்னை புத்தக காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற உள்ளது.

விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாட்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும்.

இந்த காட்சி ஜனவரி 6ஆம் தேதி மாலை 6 மணி அளவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புத்தகக் கண்காட்சியைக் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைக்க உள்ளார்.

புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சி

இதனையடுத்து 2022ஆம் ஆண்டுக்கான முத்தமிழ் அறிஞர் கலைஞர் பொற்கிழி விருதுகளையும், முதலமைச்சர் ஸ்டாலின் வழங்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசம்

கடந்த ஆண்டு போன்றே கிட்டத்தட்ட 800 அரங்குகள் அமைத்து, இந்தப் புத்தக காட்சி நடைபெறும். இதற்கு நுழைவுக் கட்டணத்தைப் பொறுத்தவரைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் பொதுமக்களுக்கு நுழைவுக்கட்டணம் 10 ரூபாய், அரங்கத்தில் மின்விசிறிகள் மற்றும் டிராலி வைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனைத் தொடர்ந்து கரோனா பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தும் புத்தக காட்சி நடைபெறும் இடத்தில் பின்பற்றப்படும். வாசகர்கள் அனைவருக்கும் முகக்கவசம் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிருமி நாசினியும் வழங்கப்படும். தடுப்பூசி செலுத்துவதற்காகத் தனியாக சிறப்புத் தடுப்பூசி முகாம் அமைக்கப்படும்.

மேலும் கடந்த ஆண்டு போலவே புத்தகத்திற்காகத் தனியாகப் பைகள் வழங்கப்படும். பிளாஸ்டிக்கைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

மகளிர் சுய உதவிக்குழுக்கள், புத்தக காட்சியில் உணவகம் அமைக்க முன்வரலாம்" எனத் தெரிவித்தார்கள்.

இதையும் படிங்க: ஸ்டாலினுடன் ரகுராம் ராஜன் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.