சென்னை : ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்ஷா குழு தேர்வு செய்யப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாகத்தில் உள்ள வானூர்தி துறையின் கீழ் செயல்படும் ட்ரோன்கள் வடிவமைக்கும் தக்ஷா குழு நாட்டில் ட்ரோன்கள் வடிவமைப்பில் முன்னனியில் உள்ளது.
இந்த நிலையில், மத்திய விமான போக்குவரத்து துறை இந்தியாவில் 5 நிறுவனங்களுக்கு ட்ரோன்கள் தயாரிப்புக்கு மானியம் வழங்க உள்ளது. அந்த வகையில் ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அதில் முதல் நிறுவனமாக தக்ஷா குழுவை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது
அதேபோன்று ட்ரோன்களின் உதிரிபாகங்கள் தயாரிப்புக்கும் மானியம் வழங்கப்பட உள்ளது. அத்தகைய உதிரி பாகங்கள் தயாரிக்கும் நாட்டிலுள்ள ஒன்பது நிறுவனங்களை மத்திய அரசு தேர்வு செய்து மானியம் வழங்க உள்ளது.
முன்னதாக, ட்ரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் மானியத்திற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்க்ஷா குழு முதன்மையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் - கல்வியாளர்கள்