சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் பயணிக்க வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தி, அனுப்பி கொண்டு இருந்தனர்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவரை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை நடத்தியதில், அவருடைய உள்ளாடைகளுக்குள் கட்டு கட்டாக, அமெரிக்கா டாலர் இருந்ததை ண்டுபிடித்தனா். உள்ளாடைக்குள் ரூபாய் 11.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
அவரின் பயணத்தை ரத்து செய்த சுங்க அதிகாரிகள், அவரிடம் இருந்த கரன்சிகளை பறிமுதல் செய்தனர். பின், அவரை கைது செய்து விசாரணை நடத்தையில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் இந்த பணத்தை கொடுத்து, சிங்கப்பூரில் உள்ள ஒருவரிடம் கொடுத்து வர சொன்னதாகவும், அதற்காக தனக்கு போக வர விமான டிக்கெட்கள் எடுத்து தந்து, 3,000 ரூபாய் பணம் தந்ததாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து பயணியிடம், இந்த பணத்தை கொடுத்து வெளிநாட்டுக்கு கடத்த சொன்ன ஆசாமி யார்? என்று சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தேனியில் சமூக ஆர்வல சகோதரிகளை கைது செய்யக்கோரி பாஜகவினர் போராட்டம்