கரூர்: கரூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான மலர்விழி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகியோரை பணியிடை மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “கரூர் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான மலர்விழி பணியிடை மாற்றம் செய்யப்பட்டு தலைமைச் செயலகத்தில் தேர்தல் அல்லாத பணிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதில் புதிய கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசாந்த் மு.வடநேரே நியமிக்கப்படுள்ளார்.
அதேபோல், காவல்துறை கண்காணிப்பாளர் மகேஸ்வரன் மாற்றப்பட்டு, புதிய மாவட்ட காவல் கண்காணிப்பா ஜி.ஷாஷாங் சாய் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக கரூர் மாவட்ட திமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் கரூர் மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் மலர்விழி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன் ஆகிய இருவரையும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக பணியிட மாற்றம் செய்ய கோரி புகார் அளித்திருந்தனர். இதையடுத்து தேர்தல் ஆணையம் தற்போது இவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க: திருப்பத்தூர் டிஎஸ்பி தற்காலிக பணியிடை நீக்கம் ஏன்? பரபரப்பு தகவல்கள்