ETV Bharat / city

பணம் மோசடி வழக்கு - இந்து மகா சபா தலைவர் கோரிய ஜானீன் மனு தள்ளுபடி - hindu maha leader Srikandan

பணம் மோசடி வழக்கில் கைதான இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன், ஜாமீன் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
author img

By

Published : Aug 11, 2021, 5:13 PM IST

சென்னை: காரப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் விமல்சந்த் என்பவர், கீழ்ப்பாக்கத்திலுள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதற்ககாகவும் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டனுக்கு 14 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், அதற்கான பணிகள் ஏதும் நடைபெறாததால் தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்குமாறு விமல்சந்த் கேட்டுள்ளார். அதற்கு, ஸ்ரீகண்டன் மிரட்டல் விடுவதாக விமல்சந்த் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

இந்தநிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் தாக்கல் செய்த மனு, நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ஸ்ரீகண்டன் மீது ஏற்கெனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதனை ஏற்ற நீதிபதி, ஸ்ரீகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும், “இந்து மகா சபா என்பது ஒரு காலத்தில் தேவாரம், திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கபட்டதாக இருந்தது, தற்போது இந்து மகா சபாக்கள் விநாயகர் சதுர்த்திக்குப் பணம் வசூல் செய்வதற்காகவே உள்ளது” என வேதனை தெரிவித்தார்.

இதையும் படிங்க: அரசியல் தலைவர்களை அவதூறாக சித்தரித்து காணொலி வெளியிட்ட யூ-டியூபருக்குக்கு பிணை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.