தமிழகத்தில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்வதை தடுக்கும் வகையில் புதிய நடைமுறைகள் தொடர்பாக அரசாணை வெளியாகியுள்ளது.
அந்த அரசாணையில், “நில உரிமையாளர்கள் தங்கள் விற்பனை செய்யும் சொத்துக்கள் குறித்து விண்ணப்பத்தை வட்ட அலுவலங்களில் சென்று விண்ணப்பித்து, அதன் புலப்பட சான்றளிக்கப்பட்ட நகல்களை பெறவேண்டும்.
இதுதொடர்பாக நில அளவையாளர் உரிய விசாரணை நடத்தி, தற்காலிக உட்பிரிவு ஆவணங்களை, இணையவழி சார்பதிவாளருக்கு அனுப்பி வைப்பார்.
நில உரிமையாளர்கள் தனது நில பரிவர்த்தனையை சார் பதிவாளர் மூலம் மேற்கொள்ளலாம். இணைய வழியான பட்டா மாறுதல் புல தணிக்கை இன்றி, தொடர்புடைய பத்திரங்கள் பதிவு செய்யப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க:செங்கல்பட்டு, பத்திரப்பதிவு மோசடியில் ஈடுபட்ட வழக்கறிஞர் உட்பட இருவர் கைது!