ETV Bharat / city

'நிலக்கரி இறக்குமதிக்குத் தடையில்லை' சென்னை உயர் நீதிமன்றம்

Charcoal import tender case
Charcoal import tender case
author img

By

Published : Feb 24, 2021, 5:19 PM IST

Updated : Feb 24, 2021, 7:21 PM IST

17:06 February 24

சென்னை: நிலக்கரி இறக்குமதிக்கான ரூ.1,330 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஒப்பந்தப்புள்ளிக் குறித்த அறிவிப்பாணையை இந்திய வர்த்தக இதழில் வெளியிடத் தமிழ்நாடு அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. 

எண்ணூர் காமராஜர் துறைமுகம் மூலம் 20 லட்சம் டன் நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்த அறிவிப்பை ஜனவரி மாதம் 18ஆம் தேதி தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் இணையதளம் மூலம் வெளியிட்டது. இதற்கான ஒப்பந்தப்புள்ளிக் கோரல் நேற்று (பிப்.23) நடைபெற இருந்த நிலையில், இதற்குத் தடை விதிக்கக் கோரி தூத்துக்குடி தனியார் நிலக்கரி நிறுவனத்தைச் சேர்ந்த திருமலைச்சாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, 2 கோடி ரூபாய்க்கு மேலான ஒப்பந்தங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் குறைந்தபட்சம் 30 நாட்கள் வழங்க வேண்டும் என ஒப்பந்தப்புள்ளி வெளிப்படை சட்டத்தில் விதி இருப்பதாகவும், ஆனால் ஆயிரத்து 330 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த  ஒப்பந்தப்புள்ளிக்கு 15 நாட்கள் மட்டுமே அவகாசம் தரப்பட்டதாகவும், வெளிநாட்டு நிறுவனங்கள் எளிதில் ஒப்பந்தப்புள்ளி எடுக்கும் வகையில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் விதிகளை மாற்றியிருப்பதாக மனுதாரர் தெரிவித்திருந்தார்.

இந்த ஒப்பந்தப்புள்ளி உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்காத வகையிலும், அதேசமயத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்கும் வகையிலும் வெளியிடப்பட்டதாகும், மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழ்நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள காரணத்தினால் ஒப்பந்தப்புள்ளி கோரலுக்கு, மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார். மேலும், நிலக்கரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டதாகவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து இரு தரப்பு வாதங்கள் நிறைவடைந்திருந்த நிலையில், இந்த வழக்கில் இன்று(பிப்.24) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, நிலக்கரி ஒப்பந்தப்புள்ளியை ரத்து செய்ய மறுத்துவிட்டார். மேலும், ஒப்பந்தப்புள்ளிக்கு மேலும் 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டதாகத் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளதால், இந்த ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பாணையை இந்திய வர்த்தக இதழில் வெளியிட வேண்டும் எனவும் அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Last Updated : Feb 24, 2021, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.