சென்னை, சூளை வெங்கடாசலம் தெருவில் வசித்து வருபவர் சந்தானம். இவர் சூளை பாரத ஸ்டேட் வங்கியில் கணக்காளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டில் கடந்த 6ஆம் தேதி அன்று மூன்று ஜோடி புதிய செருப்புகள் மற்றும் ஷூக்கள் திருடப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, அவர் வீட்டின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் அக்டோபர் 6ஆம் தேதி மாலை, ஒருவர் அவரது வீட்டிற்குள் வந்து செருப்பு, ஷூக்களை திருடி பைகளில் போட்டு எடுத்து செல்வது தெரிய வந்தது.
ஏற்கனவே இரண்டு முறை இதுபோல செருப்பு, ஷூக்கள் திருடப்பட்டதால் சந்தேகமடைந்த அவர் பெரியமேடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாகவே, வெங்கடாசலம் தெரு, பேக்கர்ஸ் சாலை, அதனை ஒட்டியப் பகுதிகளில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளில் இதுபோல் தொடர்ந்து செருப்பு, ஷூக்கள் திருட்டு நடைபெற்று வருவது தெரிய வந்துள்ளது.
மேலும் திருடப்பட்ட புதிய செருப்பு, ஷூக்கள் மூர் மார்க்கெட்டில் விற்பனை செய்ய வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க : பட்டப்பகலில் விவசாயியின் பணப்பை திருட்டு: சிசிடிவி காட்சி வெளியீடு