வேலூரில் வருமானவரித் துறை சோதனை நடத்தப்பட்டதை அடுத்து அத்தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அதேபோல் தூத்துக்குடியிலும் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் நேற்று சோதனை நடைபெற்றது.
ஆனால், ஓபிஎஸ் மகன் தேனியில் பணத்தை வாக்காளர்களுக்கு கொட்டுகிறார். மேலும், பல தொகுதிகளில் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணத்தை கொடுக்கின்றனர். இதனையெல்லாம் வருமானவரித் துறையோ, தேர்தல் ஆணையமோ கண்டுகொள்ளாதது ஏன்? என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
இந்நிலையில், ஆந்திர முதலமைச்சர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அனைத்து சோதனைகளும் எதிர்க்கட்சியினர் வீடுகளில் மட்டுமே நடைபெறுகிறது. ஆளும்கட்சியினர் யாரும் இந்த சோதனையில் சிக்கவில்லை. ஆளும் கட்சியினர் தேர்தலில் செய்யும் செலவுகள் குறித்து தேர்தல் ஆணையம், வருமான வரித்துறையினர் கவலைப்படவில்லை. இந்த தேர்தலே போலியானது” என்றார்.