ETV Bharat / city

ரமலான் நோன்புக்காக இலவச அரிசி - தடைக்கோரி இந்து முன்னணி வழக்கு!

author img

By

Published : Apr 24, 2020, 6:49 PM IST

சென்னை: ரமலான் நோன்புக்காக பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்கும் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

highcourt
highcourt

இந்தியாவில் கரோனா வைரஸ் பரவாமலிருக்க மத்திய, மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள நிலையில், இஸ்லாம் மதத்தினரின் புனித மாதமான ரமலான் நோன்பு தொடங்கவுள்ளது. இந்நிலையில், இஸ்லாமியத் தலைவர்களுடன் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி, அரசு நடத்திய ஆலோசனையில், கடந்த ஆண்டைப்போலவே இந்தாண்டும் பள்ளிவாசல்களுக்கு இலவச அரிசி வழங்க முடிவெடுக்கப்பட்டது. அதனடிப்படையில், 2 ஆயிரத்து 895 பள்ளிவாசல்களுக்கு, 5 ஆயிரத்து 440 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்கப்படவுள்ளது.

இந்நிலையில், இந்து முன்னணியைச் சேர்ந்த குத்தாலநாதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவையான அரிசி கிடைப்பது கடினமாக இருக்கும் சூழலில், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த மக்களுக்கு மட்டும் இலவச அரிசி வழங்க முடிவெடுத்திருப்பது ஏற்கக் கூடியதாக இல்லை என்பதால், ரமலான் நோன்புக்காக அரிசி வழங்கும் மாநில அரசின் அறிவிப்புக்குத் தடை விதிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து மே 7ஆம் தேதி தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: ’டெல்லி தனிமைப்படுத்தல் முகாமில் தவிக்கும் தமிழர்கள்’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.