ETV Bharat / city

ஓபிஎஸ் மகனின் பதவி தப்புமா? தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு..!

author img

By

Published : Aug 6, 2019, 1:31 AM IST

சென்னை: தேனி நாடாளுமன்றத் தொகுதியில் பணம் கொடுத்து அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாகவும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் தொடரப்பட்ட வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

op raveendrakumar

தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத்குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்தார். அதற்கான காணொலி ஆதாரங்கள் சமூக வலைத்தளங்கள் வெளியானது.

இதேபோன்ற புகார் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வந்தபோது தேர்தல் ஆணையம் அந்த தொகுதியில் தேர்தலை நிறுத்தியது. ஆனால், தேனி தொகுதியில் ஏன் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தலைத் தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்த வில்லை. மேலும் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் அதிகார துஷ்பிரயோகம் செய்து வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் கொடுத்து அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத்குமார் வெற்றி பெற்றுள்ளார்.

எனவே அவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மிளானி மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக இந்தியத் தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் அதிகாரி, அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ் ரவீந்திரநாத்குமார் ஆகியோர் வரும் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தார்.

Intro:nullBody:தேனி நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் O.P.இரவீந்திரநாத் குமார் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரிய வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி தொகுதி வாக்காளர் மிளானி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், நடந்து முடிந்த தேனி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்ததாகவும் அதற்குண்டான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்கள் வெளியானதாக தெரிவித்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற புகார் வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை நிறுத்தியது.

ஆனால், தேனி தொகுதியில் ஏன் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தலை தேர்தல் ஆணையம் நிறுத்த வில்லை. மேலும், தேனி நாடாளுமன்ற தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் செய்தும் வாக்காளர்களுக்கு அதிகளவில் பணம் பட்டுவாடா செய்தும் அதிமுக வேட்பாளர் ரவிந்தரநாத்குமார் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார்.

எனவே அவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என மிலானி மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், தலைமை தேர்தல் அதிகாரி, அதிமுக வேட்பாளரான ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார் ஆகியோர் வரும் 29ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தள்ளிவைத்தனர்.
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.