ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் மயூரா ஜெயக்குமார் போட்டியிடுகிறார். அவரது மயூரா ரேடியோஸ் நிறுவனத்திற்காக கோவையைச் சேர்ந்த சீனு எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து மின்னணு சாதனங்களை வாங்கியதில், மீதித்தொகை தொடர்பான வழக்கு கோயம்புத்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அவரது வேட்புமனுவில் இந்தக் கடன் குறித்த தகவலை தெரிவிக்காததால், அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டுமென தேர்தல் ஆணையத்திடம் சீனு எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான பிரபு தேவராஜன் புகார் அளித்துள்ளார்.
ஆனால் அதைக் கருத்தில்கொள்ளாமல் மயூரா ஜெயக்குமாரின் மனு ஏற்கப்பட்டுவிட்டதால், அவரை வேட்பாளராக அனுமதித்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டுமென சீனு எண்டர்பிரைசஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருமென எதிர்பார்க்கபடுகிறது.
இதையும் படிங்க: கடந்த 12 நாள்களில் 135% அதிகரித்த கரோனா!