சென்னை: நங்கநல்லூர் பாலாஜி நகரில் 10ஆவது தெருவில் தனிமையில் வசித்து வருபவர், ராதா (70). இந்நிலையில் கடந்த 11ஆம் தேதி காலை 6 மணி அளவில் பால் பாக்கெட் வாங்குவதற்காக அருகில் உள்ள கடைக்குச் சென்றுள்ளார்.
அங்கு கடையிலிருந்து பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு திரும்பி வரும்பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருக்கும் இரண்டு சவரன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பித்து ஓடினார். இந்த திடீர் சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ராதா கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் திருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.
இந்தச் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பழவந்தாங்கல் காவல் துறையினர் அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி செயின் பறித்த அடையாளம் தெரியாத நபரைத் தேடி வந்தனர்.
அதன்பிறகு நங்கநல்லூர் தமிழர் பர்மா காலனியைச் சேர்ந்த முத்து (41) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து இரண்டு சவரன் தங்க நகையைப் பறிமுதல் செய்தனர், காவல் துறையினர். மேலும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டு நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க:”ஆயுதபூஜை கொண்டாட பணம் இல்லை” - 3 சவரன் நகையை பறித்த நபர் கைது