ETV Bharat / city

உடற்கல்வி ஆசிரியர் நியமன சான்றிதழ் சரிபார்ப்பு 15 இல் தொடக்கம்! - பள்ளிக்கல்வித்துறை

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் 41 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 முதல் 18 ஆம் தேதி வரை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

announcement
announcement
author img

By

Published : Dec 3, 2020, 2:03 PM IST

பள்ளிக்கல்வித்துறை மற்றும் இதரத்துறைகளில் காலியாக உள்ள உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆசிரியர் பணியிடங்களில் 1,325 இடங்களை நிரப்புவதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விண்ணப்பங்களை பெற்றது. அதனடிப்படையில் அதே ஆண்டு செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட்டது.

அதில் 632 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவர்களில் முதலில் 551 பணியிடங்கள் நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டியல் அளித்தது. இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 41 பணியிடங்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 15 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்காக 142 தேர்வர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின் அடிப்படையில் 23.9.2017 அன்று நடைபெற்ற போட்டித் தேர்வை தொடர்ந்து 13.8.2018 அன்று நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பின் அடிப்படையில், திருத்திய முடிவுகள் 28.10.2020 அன்று வெளியிடப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி இயக்ககத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணியிடங்களில் நிரப்பப்படாமல் உள்ள முன்னாள் ராணுவத்தினர் மற்றும் தமிழ் வழி இட ஒதுக்கீட்டு இனசுழற்சி பணியிடத்திற்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

இதையும் படிங்க: காலியாக உள்ள 1,500 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.