புதுச்சேரி அருகே கரையைக் கடந்த ’நிவர்’ புயலால் புதுச்சேரி, டெல்டா மாவட்டங்கள், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர் மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளன. பயிர்கள், வீடுகள், படகுகள் என பலதரப்பிலும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்வதற்காக மத்திய உள் துறை இணைச் செயலாளர் தலைமையிலான மத்திய குழு, டெல்லியில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று சென்னை விமான நிலையம் வந்தது. இவர்களை தமிழக அரசு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
மத்திய குழுவானது அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் நிவர் புயல் பாதித்த இடங்களில் நேரில் ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளது. அதனடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் இக்குழு அளிக்கும்.
இதையும் படிங்க: ‘வழக்கத்தைவிட அதிகமாக பெய்த வடகிழக்கு பருவமழை’ - புவியரசன்