ETV Bharat / city

நாடு தழுவிய வேலைநிறுத்தம் - 14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு - வேலைநிறுத்தம்

சென்னை: மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து வரும் 8ஆம் தேதி நடைபெறும் நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் 14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

staffs
staffs
author img

By

Published : Jan 3, 2020, 9:11 AM IST

மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து ஜனவரி 8ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்துத்துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளன பொதுச்செயலாளர் துரைபாண்டியன், 'மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் தொழிலாளர்கள் நடத்தும் வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்களும் பங்குபெறுகிறோம். புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறுதல், 56J விதியின்படி ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்பக் கூடாது, ஒப்பந்த அடிப்படையில் வெளியாட்களை உயர் பதவிகளில் அமர்த்துவதற்கு எதிர்ப்பு உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி இவ்வேலைநிறுத்தம் நடக்க இருக்கிறது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெறவேண்டும் - மத்திய அரசு ஊழியர்கள்

இந்த வேலைநிறுத்தத்தில் இந்தியா முழுவதுமுள்ள 12.5 லட்சம் மத்திய அரசு ஊழியர்களோடு, ஒன்றரை லட்சம் தமிழ்நாடு மத்திய அரசு ஊழியர்களும் பங்குபெற இருக்கின்றனர். தபால்துறை தொழிற்சங்கங்கள், வருமானவரி, கல்பாக்கம் அணு ஆற்றல் ஊழியர்கள் சங்கம், ராஜாஜி பவன், சாஸ்திரி பவன் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் இதில் பங்கேற்கும்' எனக் கூறினார்.

இதையும் படிங்க: மத்திய அரசை கண்டித்து வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு

Intro:Body:மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து ஜனவரி 8 ஆம் தேதி நாடு முழுவதும் தொழிலார்கள் வேலை நிறுத்தம் செய்கின்றனர். இந்த போராட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களும் பங்கேற்க உள்ளதாக மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் பொதுசெயலாளர் துரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று சென்னை நுங்கம்பாக்கம் ஐயக்கார் பவனில் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

அதனை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம் பொதுசெயலாளர் துரைக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மத்திய அரசின் பொருளாதார மற்றும் தொழிலார் விரோத கொள்கைகளை கண்டித்து நாடு முழுவதும் தொழிலார்கள் நடத்தும் வேலை நிறுத்தத்தில் மத்திய அரசு ஊழியர்களும் பங்குபெறுவோம் என தெரிவித்தார். குறிப்பாக புதிய ஓய்வுஊதியத்தை திரும்பப் பெற கோரியும், 56J விதியின்படி ஊழியர்களை கட்டாய ஓய்வில் அனுப்புவதை கண்டித்தும், உயர் பதிவுகளில் வெளி ஆட்களை பதவியில் அமர்த்துவதை எதிர்த்தும், குறிப்பிட்ட காலத்திற்கு (Fixed Term) வேலைக்கு ஆட்களை எடுப்பதை கண்டித்தும் நாடு முழுவதும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம்.

இந்த வேலைநிறுத்தத்தில் பனிரெண்டரை லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், ஒன்றரை லட்சம் தமிழ்நாட்டில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களின் பங்குபெறுவர்கள் என தெரிவித்தார். தபால்துறையில் உள்ள தொழிற்சங்கங்கள், வருமானவரி, கல்பாக்கம் அணு ஆற்றல் ஊழியர்கள் சங்கம், ராஜாஜி பவன், சாஸ்திரி பவன் உள்ளிட்ட அணைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்கும் என தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசுகையில் காங்கிரஸ், பாஜக அரசிற்கு மதவாதம் தவிர பொருளாதார கொள்கையில் பெரிய வேறுபாடுகள் இல்லை என தெரிவித்தார். பாஜக பெருநிறுவன நன்மைகளுக்காக நடக்கும் அரசாங்கம், தொழிலார்கள் நன்மைகளை பற்றி பேசுவது இல்லை என குற்றம் சாட்டினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.