காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த உத்தரவிடக் கோரி மாற்றம் இந்தியா அமைப்பைச் சேர்ந்த நாராயணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு இந்த வழக்கில் ஐ.ஜி.தாக்கல் செய்த அறிக்கையில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
காவல் நிலைய வரவேற்பு அறை, லாக் அப், உள்ளிட்ட பகுதிகளில் இரவிலும் காட்சிகள் பதிவு செய்யும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், தடையில்லா மின் விநியோகம் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், காவல் நிலையங்களில் உள்ள அனைத்து அறைகளையும் கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை எனவும், காட்சிகளை பதிவு செய்யும் வசதிகள் இல்லாததற்கு, சாத்தான்குளம் தந்தை–மகன் காவல் மரண வழக்கு உதாரணமாக இருப்பதாகக் கூறி, தமிழ்நாடு தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளருக்கு எதிராக நாராயணன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, அம்மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
காவல் நிலையங்களில் சிசிடிவி: வழக்கு தள்ளுபடி - chennai high court
சென்னை: காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை என தொடுக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.