சென்னை: தியாகராய நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் ஹால்மார்க் இன்ப்ராஸ்ட்ரக்சர். இது கட்டுமான துறையில் மிகப்பெரிய நிறுவனமாக திகழ்ந்துவருகிறது.
சென்னை மற்றும் முக்கிய இடங்களில் மிகப்பெரிய அளவிலான குடியிருப்புகள், வணிக வளாகங்களை இந்த நிறுவனம் கட்டிவருகின்றது. இந்த நிலையில் ஹால்மார்க் நிறுவனமானது பாங்க் ஆஃப் இந்தியாவில் 12 கோடியே 52 லட்சம் ரூபாய் வரை வியாபாரத்தைப் பெருக்குவதற்காகக் கடன் பெற்றிருக்கிறது.
மோசடியான ஆவணங்களைத் தாக்கல்செய்து கடனைப் பெற்றதும், பின்பு அந்தக் கடனை வங்கிக்குத் திருப்பிச் செலுத்தாமல் இருந்துவந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பேங்க் ஆஃப் இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ காவல் துறையினர் இந்த நிறுவனத்தின் இயக்குநர் ஆனந்த் ஜெயின் உள்ளிட்ட மற்ற இயக்குநர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான நான்கு இடங்களில் சிபிஐ காவல் துறையினர் அதிரடியாகச் சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.