ETV Bharat / city

சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட வலியுறுத்தப்படும்: தமிழ்நாடு அரசு

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும் என பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு
தமிழ்நாடு அரசு
author img

By

Published : Apr 22, 2022, 7:37 PM IST

சென்னை: பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக்குறிப்பில், "இந்திய அரசமைப்புச்சட்டம் அரசுப்பணிகளிலும் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு செய்ய வழிவகை செய்கிறது. மாநிலங்களில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மக்கள் தொகைக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீட்டின் அளவு வேறுபடுகிறது.

எனவே, மாநிலங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு விழுக்காட்டை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த மாநில அரசுகளுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் செய்யுமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தும்.

மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள 27 விழுக்காடு இட ஒதுக்கீடு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை எனத் தெரியவருகிறது. எனவே IIT, IIM, AIIMS ஆகிய உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துக்கல்வி நிறுவனங்களிலும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்திட வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.

தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிடப்படவில்லை: அனைத்து சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான முழுமையான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு உடன் சேர்த்து நடத்திட, தமிழ்நாடு அரசு மத்திய அரசுடன் தொடர்ந்து வலியுறுத்தும். இந்திய அரசமைப்புச்சட்டத்தில் தனியார் நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. தற்போது தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் பெருகி வருகின்றன.

அரசு தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக, வரிச்சலுகை போன்று பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த பயன்கள் பிற்படுத்தப்பட்ட ஆதி திராவிடர் பழங்குடியினருக்கு சென்றடையும் விதத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அவசியம் என கருதப்படுகிறது.

இந்திய அரசமைப்புச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் மட்டுமே தனியார் துறைகளில் இட ஒதுக்கீடு வழங்க இயலும். எனவே, இதற்குத் தேவையான அரசமைப்புச் சட்டம் திருத்தம் கொண்டு வர தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்தும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு வக்பு வாரியத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக ஏ.பி.ரபியுல்லா நியமனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.