ETV Bharat / city

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கு - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Apr 20, 2022, 7:17 AM IST

தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த கோரிய வழக்கில் தமிழ் நாடு அரசு பதிலளிக்க நான்கு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020

நாட்டில் ஒரே சீரான கல்வி முறை கொண்டு வரும் வகையில் நீடித்த வளர்ச்சிக்காக மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020 தமிழகத்தில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி, கடலூரைச் சேர்ந்த ஆலமரம் (Banyan) என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை குறித்து தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்ப்பது நியாயமற்றது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தி, சமஸ்கிருதம் திணிக்கவில்லை, மாறாக தாய்மொழியுடன் (தமிழ்) சேர்த்து கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது. அன்னிய மொழியான ஆங்கிலத்தை அனுமதிக்கும்போது நமது நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. கல்வித்தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்க செய்துவிடும் என்பதால் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக, டில்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று கடைசி வாய்ப்பாக பதில்மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கில் தங்களையும் இணைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இதையும் படிங்க:தமிழ்நாடு மும்மொழிக் கொள்கைக்கு மாறவேண்டும்- இந்து மகா சபா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.