ETV Bharat / city

மின் அளவு கணக்கீடு: மின்வாரிய உத்தரவை ரத்து செய்யக்கோரி வழக்கு - மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவு

Case filed agaist EB reading and billing on usage during Lockdown
மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரிய உத்தரவை ரத்து செய்ய கோரி வழக்கு
author img

By

Published : Jun 15, 2020, 11:07 AM IST

Updated : Jun 15, 2020, 1:20 PM IST

10:59 June 15

சென்னை: ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின்சார அளவு கணக்கீடு செய்வது குறித்து மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்துக்கு செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சார கணக்கீடு செய்யும்போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்துவிட்டு, மீதி தொகைக்கு கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஊரடங்கினால், நான்கு மாதங்களுக்கான மின்சாரக் கட்டணத்தைச் சேர்த்து கட்டணம் போடுவதால் 14 விழுக்காடு வரை கூடுதல் கட்டணத்தைப் பொதுமக்கள் செலுத்த வேண்டியது வரும் மனுதாரர் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே, ஊரடங்கு காலத்தில் வீட்டு உபயோக இணைப்புக்கான மின் அளவு கணக்கீடு குறித்த மின்வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்துசெய்து, இரண்டு மாதங்களுக்குத் தனித்தனியாக கட்டண ரசீதுகள் தயாரிக்க மின்வாரியத்துக்கு உத்தரவிட வேண்டும் என வாதம் வைக்கப்பட்டது.

இதற்கு வீட்டு உபயோக மின் கட்டணம் கணக்கீட்டில் எந்த விதிமீறலும் இல்லை என அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் தெரிவித்தார்.

அரசுத் தரப்பு பதிலை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்குத் தொடர்பாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் விரிவான பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை ஜூன் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Last Updated : Jun 15, 2020, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.