மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்க்கும் வகையிலோ அல்லது பொது அமைதியை குலைக்கும் வகையிலோ, பொய்யான செய்திகளையும், உண்மை செய்திகளை திரித்தும் சமூக வலைதளங்களில் வெளியிடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கடந்த 28 ஆம் தேதி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வகையில், இரு மதத்தினரிடையே கலவரம் ஏற்படுத்தும் வகையிலும், (இந்துக் கோயில்கள் இடிக்கப்படுவதாகவும், ஆனால் இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருக்கும் தேவாலயம் இடிக்கப்படவில்லை எனவும்) மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகளை அநாகரிகமாக பேசி" சமூக வலைத்தளத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வீடியோ வெளியிட்டிருந்தார்.
![ட்விட்டரில் மதக்கலவரம் தூண்டும் விதமாக பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-bjpfir-script-7202290_31012022080032_3101f_1643596232_1007.jpg)
இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பாஜக செயற்குழு உறுப்பினர் சவுதா மணி பதிவிட்டு "தைரியமா? விடியலுக்கா?" என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுதொடர்பாக சவுதா மணி மீது நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சவுதா மணி மீது கலகம் செய்ய தூண்டுதல், அரசுக்கு எதிராக அல்லது பொது அமைதிக்கு எதிராக எந்தவொரு நபரையும் கலகம் செய்யத் தூண்டுதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
![ட்விட்டரில் மதக்கலவரம் தூண்டும் விதமாக பதிவு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-01-bjpfir-script-7202290_31012022080032_3101f_1643596232_927.jpg)
இதேபோல கடந்த 28 ஆம் தேதி பாஜக நிர்வாகியான வினோஜ் பி செல்வம் என்பவர் மதக்கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டதாக அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு - சைபர் கிரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடும்பத் தகராறு - மனைவியை கத்தியால் வெட்டிய கணவன்