ETV Bharat / city

மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம்! சீரழிந்திருக்கக் கூடாது!

சென்னை: தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அக்., 24ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக, பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

bsnl employees protest
author img

By

Published : Oct 17, 2019, 8:08 PM IST

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன், நிர்வாகிகளுடன் கலந்துகொண்டு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 'பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றம்' (SAVE BSNL FORUM) என்ற அமைப்பின் கீழ், நாங்கள் 10 சங்கங்கள் இணைந்து தமிழ்நாடு தழுவிய அளவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன் ஒரு கட்டமாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில், அக்டோபர் 24ஆம் தேதி தர்ணா போராட்டம் நடத்த இருக்கிறோம். அதன் மறுநாள் 25ஆம் தேதி, ஆளுநரை சந்தித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எங்களுடைய கோரிக்கையை மனுவாக சமர்ப்பிக்கிறோம். பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு 100% அரசுத்துறை நிறுவனம். அந்த நிறுவனம் இன்று கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

ஆப்கானிஸ்தானுக்கு 75 ஆயிரம் டன் கோதுமையை பரிசளிக்கிறது இந்தியா!

85 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு, எட்டு மாதமாகச் சம்பளம் வழங்காமல் இருக்கிற சூழல் நிலவுகிறது. மின்சார இணைப்புகளுக்கான கட்டணத்தைக் கூட கட்ட முடியாமல், பல இடங்களில் இணைப்பு துண்டிக்கப்படும் அவலநிலை தொடர்கிறது. நிரந்தர ஊழியர்களுக்கு மாத சம்பளம் உரிய தேதியில் வழங்கப்படுவதில்லை. செப்டம்பர் மாத சம்பளம் தற்போது வரை வழங்கவில்லை.

ஒற்றைக் கோரிக்கையுடன் பிஎஸ்என்எல் என்ற ஒரு அரசுத்துறை நிறுவனத்தை அழிந்துவிட அனுமதிக்கக்கூடாது. பிரதமருக்கு இதில் முக்கிய கடமையும், பொறுப்பும் இருக்கிறது. ஆகவே அவர், நிதி உதவி செய்து இந்த நிறுவனத்தைக் கைதூக்கி விட வேண்டும். எங்களுக்கு அரசு தர வேண்டிய 2500 கோடி ரூபாய் பாக்கியை, இந்த இக்கட்டான நேரத்திலாவது கொடுத்து உதவ வேண்டும்.

இந்திய பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தை பிடித்த தமிழர்!

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மிகக்குறைவான கடன் பெற்றுள்ள நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் தான். ஆனால் எங்களுக்கு வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டுமென்றால், அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதை அரசு செய்யாதது வேதனை அளிக்கிறது.

பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்றத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்கள் சந்திப்பு

ஒரு நல்ல நிறுவனம். மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம், இப்படி சீரழிந்து விடக்கூடாது. ஆகவே எங்கள் ஒரே ஒரு கோரிக்கை, மத்திய அரசுத் துறைகளும், மாநில அரசுத் துறைகளும், அவற்றின் பொதுத் துறை நிறுவனங்களும், தங்களின் தொலைத்தொடர்பு சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அப்படிப் பயன்படுத்தினால், இந்த நிறுவனம் காலத்துக்கும் நிலைத்து நிற்கும், என்றார்.

Intro:தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 24ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பிஎஸ்என்எல் பாதுகாப்பும் மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்

Body:சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பிஎஸ்என்எல் பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதிவண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்தனர் அதில்

save பிஎஸ்என்எல் forum என்ற அமைப்பின் கீழ் நாங்கள் 10 சங்கங்கள் இணைந்து தமிழகம் தழுவிய அளவில் பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்கான தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம் அதன் ஒரு கட்டமாக சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் வரும் 24ம் தேதி தர்ணா போராட்டம் நடத்த இருக்கிறோம்

மறுநாள் 25ஆம் தேதி ஆளுநர் அவர்களை சந்தித்து நம்முடைய பாரத பிரதமர் நரேந்திரமோடி அவர்களுக்கு எங்களுடைய கோரிக்கையை மனுவாக சமர்ப்பிக்கிறோம்

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு 100% அரசுத்துறை நிறுவனம் அந்த நிறுவனம் இன்று கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது 85 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 8 மாதமாக சம்பளம் தராமல் இருக்கிற சூழல் நிலவுகிறது

மின்சார இணைப்பு களுக்கான கட்டணத்தை கூட கட்ட முடியாமல் அவை பல இடங்களில் துண்டிக்கப்படும் அவலநிலை தொடர்கிறது நிரந்தர ஊழியர்களுக்கு மாத சம்பளம் உரிய தேதியில் வழங்கப்படுவதில்லை குறிப்பாக செப்டம்பர் மாத சம்பளம் இன்றைக்கு அக்டோபர் 17 வரையில் கூட வழங்கவில்லை தீபாவளிக்கு முன்பு பார்த்த காலம் போய் தீபாவளிக்கு முன்பு என்றைக்கு மாதம் சம்பளம் வருமா என்ற ஒரு சூழலில் நாங்கள் இருக்கிறோம்

ஒரே கோரிக்கை ஒற்றைக் கோரிக்கையுடன் பிஎஸ்என்எல் என்ற ஒரு அரசுத்துறை நிறுவனத்தை அழிந்துவிட அனுமதிக்கக்கூடாது பாரத பிரதமருக்கு இதில் முக்கிய கடமை பொறுப்பு இருக்கு ஆகவே அவர் நிதி உதவி செய்து இந்த நிறுவனத்தை கைதூக்கி விட வேண்டும் எங்களுக்கு அரசு தர வேண்டிய 2500 கோடி ரூபாய் பாக்கியை இந்த இக்கட்டான நேரத்தில் ஆவது கொடுத்து உதவ வேண்டும்

தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மிகக்குறைவான கடன் பெற்றுள்ள நிறுவனம் பிஎஸ்என்எல் நிறுவனம் தான் ஆனால் எங்களுக்கு வங்கிகளில் கடன் கொடுக்க வேண்டுமென்றால் அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ஆனால் அதை அரசு செய்யாதது வேதனை அளிக்கிறது

ஒரு நல்ல நிறுவனம் மக்கள் சேவையில் ஈடுபட்ட அரசு நிறுவனம் இது சீரழிந்து விடக்கூடாது ஆகவே எங்கள் ஒரே ஒரு கோரிக்கை மத்திய அரசு துறைகளும் மாநில அரசு துறைகளும் அவற்றின் பொது துறை நிறுவனங்களும் தங்களின் தொலைத்தொடர்பு சேவை பிஎஸ்என்எல் நிறுவனத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும் அப்படி பயன்படுத்தினால் இந்த நிறுவனம் காலத்துக்கு நிலைத்து நின்று விடும்.

பேட்டி- மதிவண்ணன் ஒருங்கிணைப்பாளர்(save bsnl forum)

Conclusion:தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாப்பதற்காக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 24ஆம் தேதி தர்ணா போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என பிஎஸ்என்எல் பாதுகாப்பும் மன்றத்தின் நிர்வாகிகள் தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.