சென்னை: பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் தினமும் லண்டனிலிருந்து புறப்பட்டு அதிகாலை 3.30 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துசேரும். அதன்பின்பு அதிகாலை 5.31 மணிக்கு சென்னையிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு லண்டன் செல்லும்.
இந்நிலையில் இன்று(ஆக.14) இந்த விமானம் காலதாமதமாக, சென்னைக்கு வர இருப்பதால், சென்னையிலிருந்து லண்டன் புறப்படும் விமானமும் தாமதம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 5.31 மணிக்கு லண்டன் செல்ல வேண்டிய பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பிற்பகல் 2.35 மணிக்கு சென்னையிலிருந்து லண்டனுக்கு புறப்பட்டுச்செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் சென்னையிலிருந்து லண்டன் செல்வதற்கு 342 பயணிகள் இருந்தனர். இந்நிலையில் நேற்று(ஆக.13) இரவு பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் பயணிகளுக்கு, விமானம் தாமதம் என்ற தகவலை அனுப்பி உள்ளது.
ஆனாலும் சில பயணிகள் இன்று முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து விட்டனர். இதை அடுத்து அந்த பயணிகள் ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பிரிட்டிஷ் ஏா்வேஸ் விமானம் வழக்கமாக குறித்த நேரத்துக்கு வந்துவிட்டு, குறித்த நேரத்துக்கு புறப்பட்டுச்செல்லும். ஆனால் இன்று 9 மணி நேரம் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதற்குக் காரணம், லண்டனிலிருந்து வானிலை காரணமாக இந்த விமானம் சுமார் 9 மணி நேரத்திற்கும் மேல் தாமதமாக புறப்பட்டதால், சென்னை வருவதில் தாமதம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நொய்டா இரட்டைக்கோபுரங்களை இடிக்க வெடிமருந்து தயார்