சென்னை: கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு பட்டா வேண்டி, உத்தண்டி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் என்பவரை அணுகியுள்ளார். பட்டாவிற்கு ரூபாய் 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா கொடுக்கப்படும் இல்லையென்றால் பட்டா வழங்கப்படாது, என கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் கூறியதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராஜேஷ், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்களிடம் புகார் அளித்துள்ளார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின் பேரில் ரஜேஷ் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் ரமேஷிடம் கொடுத்தார்.
அப்போது, மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக கிராம நிர்வாக அலுவலரை கைது செய்தனர். அவரிடம் லஞ்ச ஒழிப்பு அலுவலர்கள் விசாரணை நடத்திய பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதையும் படிங்க: 13 ஆண்டுகள் நிலுவை ஊதியத்தை பெற்று தந்த ஆதிதிராவிடர் மாநில ஆணையம்