சென்னை: இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதனையடுத்து, முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இணை நோய் உள்ளவர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சேவையை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை பட்டினபாக்கத்தில் இன்று (ஜனவரி 10) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் 35.46 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள் உள்ளனர். 9.78 லட்சம் முன்களப் பணியாளர்கள், 5.65 லட்சம் சுகாதார பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் உள்ள 20.3லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்கள்.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி 35 வாரங்கள் அல்லது ஒன்பது மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்கள். இந்த பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (ஜனவரி 10) முதல் தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டுக்கு வருகிறது.
இதையும் படிங்க: Covid cases in India: நாட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு