சென்னை: இன்று (ஜன.18) சைதாப்பேட்டையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி (பூஸ்டர் டோஸ்) செலுத்தும் பணியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாட்டில் ஜன.10 ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாகவும், சுகாதாரத்துறை பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு இதுவரை 92,522 நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மேலும், இனி வியாழக்கிழமை தோறும் தமிழ்நாடு முழுவதும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுமென அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதிலும் 600 இடங்களிலும், சென்னையில் மட்டும் 160 இடங்களிலும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க: சென்னையில் 20-29 வயது நபர்கள் கரோனாவால் அதிகளவில் பாதிப்பு