சென்னை மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயில் நிர்வாகத்துக்கு சைதாப்பேட்டையைச் சேர்ந்த முகமது ஹனீப் பாகவி என்ற பெயரில் கடிதம் ஒன்று வந்தது. அந்தக் கடிதத்தை படித்த கோயில் நிர்வாகத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.
அந்தக் கடிதத்தில், பாபர் மசூதியை இடித்து அயோத்தியில் கோயில் கட்டினால் வெடிகுண்டு வைத்து தகர்த்துவிடுவேன் எனவும் தன்னிடம் உள்ள வெளிநாட்டு குண்டுகளை வைத்து அனைத்து கோயில்களையும் தகர்த்துவிடுவேன் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைக் கண்ட கோயில் நிர்வாகத்தினர் உடனே மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர். பின்னர் வெடிகுண்டு நிபுணர்கள் கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்து சோதனை மேற்கொண்டனர். மேலும் இந்தக் கடிதத்தை எழுதிய நபரை காவல் துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க:
அடுத்த 6 மாதத்திற்குள் மெரினாவை உலகத்தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற வேண்டும் - உயர் நீதிமன்றம்