சென்னை: திருவொற்றியூர் மனசாட்சி அறக்கட்டளை விழி இழந்தோர் அமைப்பின் சார்பில், உலக வெண்கோல் நாளை முன்னிட்டு திருவொற்றியூரில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
1921ஆம் ஆண்டு போட்டோ கிராஃபர் ஜேம்ஸ் பிக்ஸ் என்பவர் விபத்தில் சிக்கி காயமடைந்தார். அதையடுத்து அவர் கறுப்பு நிறத்தில் வெண் கோல் ஒன்று கண்டுபிடித்தார். அது கறுப்பு நிறம் என்பதால் பொதுமக்களுக்குத் தெரியாது என்பதினால் வெள்ளை நிறத்தில் அதனைக் கண்டுபிடித்தார்.
இதனைத் தொடர்ந்து, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து ரிச்சர்ட் உவர் மக்களுக்கு எடுத்துரைத்தார். அதன் அடிப்படையில் ஆண்டுதோறும் அக்டோபர் 15ஆம் தேதி உலக வெண்கோல் நாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் வெண்கோல் நாளைக் கொண்டாடும்விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்த திருவொற்றியூரில் மனசாட்சி அறக்கட்டளை சார்பில் பார்வை மாற்றுத்திறனாளிகளை வைத்து விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை பாலம் இருளப்பன் தொடங்கிவைத்தார்.
இந்தப் பேரணி திருவொற்றியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கி திருவொற்றியூர் பூந்தோட்டம் தெருவில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே நிறைவுபெற்றது. இந்தப் பேரணியில் பார்வை மாற்றுத்திளனாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் பேரணியாகச் சென்றனர்.
இதையும் படிங்க:பசுபதிபாண்டியன் ஆதரவாளரை கொன்ற வழக்கில் இருவர் கைது