ETV Bharat / city

இனி 'தேவை'யில்லை பணம் நோட்டாக; தகுதியால் சேரலாம் 'நீட்'டாக...! - பாஜக தலைவர் அண்ணமலை அறிக்கை

நான்காயிரம் கோடி ரூபாய் மொத்த செலவில், மத்திய அரசின் 2145 கோடி ரூபாய் பங்களிப்பில் தமிழ்நாட்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை ஜனவரி 12இல் நரேந்திர மோடி திறந்துவைக்கிறார் என்று கூறிய அண்ணாமலை, இனி அரசுப் பள்ளி மாணவர்கள் நாளை அரசுப்பணி மருத்துவர்களாக, புதிய சாதனை படைக்க அரிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார், நம் பிரதமர் எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

dgfsd
fd
author img

By

Published : Jan 11, 2022, 10:05 PM IST

சென்னை: இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மக்களின் உயிர் காக்கும் மருத்துவக் கல்வியை மேம்படுத்தவும், எதிர்கால இந்தியாவை நோயற்ற இந்தியாவாக வலுப்படுத்தவும், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களின் மாவட்டந்தோறும் மருத்துவக் கல்லூரிகள் என்ற மகத்தான பிரதமரின் திட்டத்தில் மத்திய அரசின் பங்களிப்பில் புதிதாகப் பதினோரு மருத்துவக் கல்லூரிகள் நாளை (ஜனவரி 12) தமிழ்நாட்டில் திறக்கப்படுகின்றன.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும், ஒரே நேரத்தில் பதினோரு புதிய மருத்துவக் கல்லூரிகளில், இதுபோல திறக்கப்பட்டதாக இதுவரை நம் நாட்டில் எந்த வரலாறும் இல்லை. இந்தச் சாதனையை, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் படைத்திருக்கிறார், என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சிக்குரிய செய்தி.

தமிழ்நாட்டிற்கு அரிய வாய்ப்பை ஏற்படுத்தித் தந்த மோடி

நான்காயிரம் கோடி ரூபாய் மொத்த செலவில், மத்திய அரசின் 2145 கோடி ரூபாய் பங்களிப்பில், விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் நாளை திறக்கப்படுகின்றன.

இதன்மூலம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 26 லிருந்து 37ஆக உயர்கிறது. அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவர் சேர்க்கைக்கான இடங்களில் புதிதாக 1,450 சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டிற்கு, தற்போது இந்தப் புதிய மருத்துவக் கல்லூரிகள் கிடைத்திருக்கும் கூடுதல் மாணவர் சேர்க்கை இடங்கள் மூலம், இனி அரசுப் பள்ளி மாணவர்கள் நாளை அரசுப்பணி மருத்துவர்களாக, புதிய சாதனை படைக்க அரிய வாய்ப்பை உருவாக்கித் தந்திருக்கிறார், நம் பிரதமர் நரேந்திர மோடி.

தேசத்தை முன்னிறுத்தும் மோடியின் தமிழ் நேசம்

மோடியின் இந்த மகத்தான சாதனையால், மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு இனி கூடுதல் இடம் கிடைக்க வாய்ப்பளித்திருக்கும் நரேந்திர மோடிக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பில் பாரதிய ஜனதா கட்சி மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில், மத்திய அரசு சார்பில் மூன்று தளங்களைக் கொண்ட புதிய அலுவல் வளாகத்தினையும் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைக்கிறார். தேசத்தை முன்னிறுத்தி தமிழ் நேசத்தை வெளிப்படுத்தும் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்துவோம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: அடுத்தவர் குழந்தையும் தங்களது என ஸ்டிக்கர் ஒட்டாதே விடியா அரசே! - இபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.