ETV Bharat / city

ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல் - திமுக

சென்னை: பட்டியலின மக்களை இழிவுபடுத்தி தயாநிதி மாறன் பேசியதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொதுமக்கள் முன்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

murugan
murugan
author img

By

Published : May 20, 2020, 2:57 PM IST

பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், அக்கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில், செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், "தமிழ்நாடு அரசுடன் இணைந்து மாநிலம் முழுவதும் சமையல் அறைகளை திறந்து 1.15 கோடி உணவுப் பொட்டலங்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு 35 லட்சம் அரிசி, பருப்பு கொண்ட ’மோடி கிட்’களை அளித்து வருகிறோம். சுமார் 35 லட்சம் விவசாயிகளுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து 2,000 ரூபாய், வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

கரோனாவால், நாடு முழுவதும் விலகி இருப்போம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ஒன்றிணைவோம் வா என்று கூறிக்கொண்டிருக்கிறார். ஒரு லட்சம் மனுக்களை திமுகவினர் எங்கிருந்து சேகரித்தனர் என்று தெரியவில்லை. அவற்றை, திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைச் செயலாளரிடம் வழங்கியதற்கு, அவரும் அதற்கு விளக்கம் தந்துள்ளார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், தலைமைச் செயலாளர் தங்களை 3ஆம் தர மக்களாக நடத்துகிறார் என்று கூறியுள்ளார்.

இது பட்டியலின மக்களை மிகவும் இழிவுபடுத்தி பேசிய செயலாகும். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசிய தயாநிதி மாறன் மீது தமிழ்நாடு அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் பொதுமக்கள் முன்பாக மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் - எல்.முருகன் வலியுறுத்தல்

இதையும் படிங்க: பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேச்சு: தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.