இந்தியாவில், ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன.
இந்நிலையில், பாஜக தேர்தல் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் திருமலைசாமி மத்திய தேர்தல் ஆணையர்களை சந்தித்தார். பின்பு செய்தியாளர்களாச் சந்தித்து அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடும் வேலூர் தொகுதியில் பட்டுவாடா செய்வதற்காககட்டுக்கட்டாகபதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. எனவே, கதிர் ஆனந்த்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். சம்மந்தப்பட்ட கட்சியான திமுக மீதும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம், என்றார்.
மேலும், ராமநாதபுரம் தொகுதியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது பயங்கரவாத சக்திகள் தாக்குதல் நடத்தியதால் அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் இனியும் தொடரலாம் என்பதால் வேட்பாளருக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.